Search This Blog
Friday, February 12, 2010
Paiya
Movie Name : Paiya,
Banner: Thirupathi Brothers
Cast: Karthi & Tamanna, Direction: Lingusamy
Production: Subash Chandrabose,
Released Year: 2009
Music: Yuvan Shankar Raja,
Lyricis: Na.Muthukumar
திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், டைரக்டர் லிங்குசாமி இயக்கி வரும் படம் பையா. படத்தின் நாயகனாக கார்த்தி நடிக்க அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். இதுவரை காட்டாத கவர்ச்சியையெல்லாம் தமன்னா இப்படத்தில் காட்டியிருக்கிறாராம். வில்லனாக மிலிந்த் சோமன் நடித்துள்ளார். பையாவின் ஸ்பெஷல் ஹைலைட்ஸ் :-
* இயக்குனர் லிங்குசாமி இயக்கும் 6வது படம் பையா. திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் இது.
* படத்தில் ஒரு கார் முக்கிய பங்கு வகிக்கிறது. மும்பையில் இருந்து ஸ்பெஷல் ட்ராக் வரவழைத்து அதில் 50 நாட்கள் சூட்டிங் நடத்தியிருக்கிறார்கள்.
* முழுக்க முழுக்க சூப்பர் 35 கேமராவால் படமாக்கப்பட்டிருக்கிறது பையா படம்.
* மும்பையில் உள்ள பிரபலமான நிதின் தேசாய் ஸ்டூடியோவில் 10 நாட்கள் பையா க்ளைமாக்ஸ் சூட்டிங் நடந்திருக்கிறது. ஹைடெக் ஸ்டூடியோவான இந்த ஸ்டூடியோவில் ஒரு நாள் வாடகை மட்டும் இரண்டரை லட்சம் ரூபாய்.
* க்ளைமாக்ஸ் காட்சிகளை எடுப்பதற்காக மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்களாம். மும்பையை சேர்ந்த 300 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் க்ளைமாக்ஸ் காட்சியில் நடித்திருக்கிறார்கள்.
* படத்தில் இடைவேளைக்கு முன்னால் ஒரு பிரமாண்டமான சண்டைக்காட்சி இடம்பெறுகிறது. சுமார் 500 பிரேம் ஓடும் இந்த காட்சியை எடுப்பதற்காக னிம்மி ஜிம், கிரேன் உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
* சுத்துது சுத்துது என்ற பாட்டுக்கு நதி, நிலா, ஓடை, பூங்கா என இயற்கை காட்சிகளுடன், ஆர்ட் டைரக்டர் ராஜீவனின் செட்டும் அழகு சேர்க்கிறது. இந்த பாடல் காட்சி இரவு எபெக்ட்டில் அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது.
* மொத்தம் 9 ஷெட்யூலில் வெளிப்புற படப்பிடிப்பு நடந்துள்ளது. ஐதராபாத், மும்பை, புனே, பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சூட்டிங் நடந்துள்ளது.
* ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மனைவி ப்ரியா, முதன் முறையாக இப்படத்தில் உடை அலங்கார நிபுணராக பணியாற்றியிருக்கிறார்.
* பையா படத்துக்கு இதுவரை ரூ.20 கோடிக்கு மேல் செலவாகி இருக்கிறதாம்.
* பிப்ரவரி 12ம்தேதி பையாவை திரையிட திட்டமிட்டிருக்கிறார் டைரக்டர் லிங்குசாமி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment